புத்தாண்டுக்குப் பின்னர் 2 ஆடையகங்கள் மற்றும் வங்கியொன்றில் இருந்து 52 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் (NOCPCO) இன்று தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 11 ம் திகதி ஆடையகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளில் 17 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், கொழும்பில் உள்ள அரச வங்கியொன்றில் 300 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 35 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, வங்கியில் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்ட ஆடையகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், கடைகளை கிருமிநீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.