சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தனி மே தின பேரணியை நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம் மேற்கொண்டுள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் தயாசிறி ஜெயசேகர மேலும் கூறியுள்ளதாவது, “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டணியிலுள்ள அனைத்து கட்சிகளும் மே தின பேரணியில் பங்குகொள்ளுவதற்கு அழைக்கப்படுவார்கள்.
அதற்கானஅழைப்பு அட்டைகள் விரைவில் அனுப்பி வைக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.