2018 ஆம் ஆண்டில் மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 17 பேர் தொடர்பான விசாரணைக்காக நீதிமன்ற அமர்வை நியமிக்குமாறு சட்டமா அதிபர் டப்புலா டி லிவேரா தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கேகாலை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், சட்டத்தரணியுமான நிஷார ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளாக நௌபர் மௌலவி, இப்ராஹிம் மௌலவி, மொஹமட் சாஜித், மொஹமட் சாஹித், சாதிக் அப்துல்லா, சைனுல் அப்தீன், மொஹமட் மில்ஹான் மற்றும் 9 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
வன்முறையை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டியமை மாவனெல்ல பகுதியில் புத்தர் சிலைகளை உடைப்பதன் மூலம் சமூகங்களிடையே ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு முயற்சித்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.