மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என கொரோனா ஒழிப்பு பற்றிய தேசிய செயலணியின் தலைவரும் , இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .
கொரோனா ஒழிப்பு பற்றிய தேசிய செயலணி இன்று ( செவ்வாய்க்கிழமை ) இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இம்முறை மே தினக் கொண்டாட்டங்களை தனியே நடத்த ஆளுங்கட்சியிலுள்ள சுதந்திரக்கட்சி தீர்மானம் எடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.