வீரகெட்டியவின் கின்சிகுனே (Kinchigune) பகுதியில், கைத்துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், வீரகெட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனையின்போது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் மெதமுலன, கின்சிகுனே பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வீரகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













