அமெரிக்கா தலைமையில் நடைபெறும் சர்வதேச பருவநிலை மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) உரையாற்றுகிறார்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக இரண்டு நாள் சர்வதேச மாநாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒழுங்கு செய்துள்ளார்.
குறித்த மாநாடு இன்று ஆரம்பமாகுகிறது. இதில் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 40 நாடுகளின் தலைவர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்கவுள்ளனர்.
இதன்போது பிரதமர் நரேந்திர மோடி 2030 ஆண்டின் பருவநிலை இலக்கை அடைய செயற்பட வேண்டும் என்ற தலைப்பில் பேசவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பருவநிலை மாற்றம், காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கைகளுக்கான நிதியுதவி, தூய எரிசக்தி சார்ந்த தொழில்நுட்ப கண்டுப்பிடிப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்த உலக தலைவர்கள் விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.