கொரோனா தடுப்பூசி செலுத்தும் வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு புதிய பிரச்சாரம் பிரித்தானியாவில் தொடங்கியுள்ளது.
அதன்படி 50 வயதிற்குட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் சமீபத்திய பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் மிக சமீபத்திய ஆய்வில் 94% முதியவர்கள் தடுப்பூசிகளைப் பற்றி சாதகமாக உணர்ந்தாலும், 16 முதல் 29 வயதுடையவர்களில் எட்டு பேரில் ஒருவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை போர் இன்னும் முடிவடையாத நிலையில் இதுவரை 45.5 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் மெட் ஹான்கொக் தெரிவித்துள்ளார்.
12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்போது தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுள்ளனர் என்றும் அதே நேரத்தில் 33.5 மில்லியன் பேர் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் எண்ணிக்கை, இங்கிலாந்து மக்கள் தொகையில் அரைவாசி அதாவது, 66.7 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.