இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸிற்காக 541 ஓட்டங்களை பெற்றபோது ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.
இதனை அடுத்து பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து 648 ஓட்டங்களை பெற்ற பின்னர் ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 244 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 166 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக டஸ்கின் அகமட் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்நிலையில் 107 ஓட்டங்கள் பின்னிலையுடன் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய பங்களாதேஷ் அணி 2 விக்கெட்களை இழந்து 100 ஓட்டங்களை பெற்றபோது மழை குறுக்கிட்டது.
இதன் காரணமாக 5 ஆம் நாள் ஆட்டம் தடைப்பட போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவடைந்தது.
பங்களாதேஷ் அணி சார்பாக தமீம் இக்பால் 74 ஓட்டங்களையும் மோமினுல் ஹக் 23 ஓட்டங்களையும் அட்டமிழக்கத்து பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக சுரங்க லக்மால் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.