ஸ்கொட்லாந்தில் உள்ள கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பப்கள், உணவகங்கள் மற்றும் அருந்தகங்கள் நான்கு மாத கால குளிர்கால முடக்கநிலைக்கு பிறகு மீண்டும் திறக்கப்படுகின்றன.
அத்துடன், பயணக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இது அவசியமற்ற காரணங்களுக்காக பிரித்தானியாவின் பிற பகுதிகளுக்கு பயணங்களை அனுமதிக்கிறது.
ஓட்டுநருக்கான பாட திட்டங்கள் மற்றும் சோதனைகள் மீண்டும் தொடங்கலாம். அதே நேரத்தில் நக பராமரிப்பு நிலையங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் விடுமுறை தங்குமிடங்களும் மீண்டும் திறக்கப்படலாம்.
மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு முதல் தடுப்பூசி அளவை வழங்குவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று அமைச்சர்கள் கூறுகின்றனர்.
ஸ்கொட்லாந்து டிசம்பர் 26ஆம் திகதி முதல் நான்காம் நிலை முடக்கநிலையில் உள்ளது.
அனைத்து அத்தியாவசிய கடைகள், ஓய்வு வசதிகள் மற்றும் விருந்தோம்பல் இடங்கள் மூடப்பட்டுள்ளன.
இங்கிலாந்தைப் போலல்லாமல், பப்கள் மற்றும் உணவகங்கள் 20:00 வரை வீட்டுக்குள் திறக்கப்படும். ஆனால் அவை வெளியில் அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே மது பரிமாற முடியும்.