அசாம் மாநிலத்தில் இன்று (புதன்கிழமை) காலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 6.4 எனப் பதிவாகிய மேற்படி நிலநடுக்கம், மேற்கு வங்க மாநிலத்தின் ஒரு சில பகுதிகளிலும் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் தொடர்பிலான மேலதிக தகவல்களை திரட்டி வருவதாக அம்மாநில உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் குறித்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.