இந்தியாவின் அஸாமில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அஸாமில் உள்நாட்டு பூகம்பம் பதிவாகியுள்ள நிலையில், இதன் காரணமாக, இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் இது கடல் பகுதியில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது எனவும் அந்த நிலையத்தின் உதவி இயக்குநர் பிரதீப் கொடிபில்லி கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இன்று காலை அசாமில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவின் நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
எனினும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லையென்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ரொய்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, வடகிழக்கு மற்றும் அண்டை நாடான பூட்டானின் பல பகுதிகளில் பலத்த நிலநடுக்கம் மீண்டும் மீண்டும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.