அவுஸ்ரேலியாவின் வடக்கு பகுதியிலுள்ள நான்கு இராணுவத் தளங்களை விரிவுபடுத்தும் நோக்கில் 580 மில்லியன் டொலர் செலவிடப்படவுள்ளது.
அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இராணுவ மேம்பாட்டு திட்டங்கள் எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், அமெரிக்காவுடன் இணைந்து போர் உத்திகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.