புதுச்சேரியில் ஏப்ரல் 30ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டிருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, மே மாதம் 3ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஊரடங்கு 3ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அங்குள்ள மதுபானக் கடைகளும் 3ஆம் திகதி வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்த நிலையில், முன்னதாக அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
அதன்படி வைத்தியசாலைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.