கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை சேவைகளை கட்டுப்படுத்த தேசிய பல் வைத்தியசாலை தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் அவசர சிகிச்சை மாத்திரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தேசிய பல் வைத்தியசாலையின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்விடயம் தொடர்பான மேலதிக விபரங்களை 0112 69 31 06 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.