தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (வியாழக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31ஆம் திகதி வரை ஒக்ஸிஜன் தயாரிக்கலாம் என்றும் ஒக்ஸிஜன் தயாரிக்க பிறப்பித்த உத்தரவு ஜூலை 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆலையை திறக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை சந்தித்து எதிர்ப்புக் குழுவினர் மனு கையளித்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள், வியாபாரிகள் உட்பட அனைவரும் நாளை தங்களது வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்தனர்.