கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பேரிழப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தியாவிற்கு, 10 மில்லியன் டொலர்களை கனடா வழங்கியுள்ளது.
இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘தற்போது இந்திய மக்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். அம்புலன்ஸ் முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை வாங்குவதற்கு 10 மில்லியன் டொலர்களை இந்திய செஞ்சிலுவை அமைப்புக்கு வழங்கியுள்ளோம்.
மேலும், கூடுதல் மருத்துவ உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களால் முடிந்த எந்த வகையிலும் இந்தியாவுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன’ என கூறினார்.