கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள இந்தியாவிற்கு உதவ நாற்பது நாடுகள் முன்வந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடுகளிலும் உள்ள இந்திய தூதுவர்களுடனும் ஆலோசனை மேற்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சுமார் 40 நாடுகள் இந்தியாவுக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளதாகவும் ஜெய்சங்கர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பல நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி வழங்கி உதவியதன் பயனாக மேலும் பல நாடுகள் இப்போது இந்தியாவிற்க உதவ முன்வந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றுபவர்களின் குடும்பத்தினர் விரும்பினால் உடனடியாக நாடு திரும்பலாம் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.