தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
இதில் மாவட்ட கண்காணிப்பாளர்கள், மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஒக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.