இந்தியாவில் உருமாற்றம் அடைந்து தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் சிறந்த பலனளிப்பதாக மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதைத் தவிர்க்க முடியாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், மூன்றாவது கொரோனா அலையின் தாக்கம் எப்போது என்பது தெரியாது எனவும் எனினும், அதனை எதிர்கொள்ள நாடு தயாராக இருக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது இந்தியாவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உருவாகி வேகமாக பரவும் நிலை உள்ளதாக என்றும் விஜய்ராகவன் தெரிவித்துள்ளார்.