மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர் ஜக்தீப் தன்கர், மம்தா பானர்ஜிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில், மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள ஆளுநர், மாநிலத்தில் வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, முதல்வராகப் பதவியேற்றுள்ள மம்தாவுக்கு, பிரதமர் மோடி ருவிற்றரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.