இலங்கையால் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக்-வி (Sputnik-V) தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் திட்டம் இன்று(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, கொழும்பு கொதட்டுவைப் பிரதேசத்தில் 30 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதலாவது ஊசி செலுத்தப்படவுள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி கடந்த மூன்றாம் திகதி இரவு இலங்கையை வந்தடைந்தது.