நாட்டின் மேலும் சில பகுதிகள் இன்று(வியாழக்கிழமை) காலை முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினால் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த கொத்மலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பனன்கம்மன கிராம உத்தியோகத்தர் பிரிவு இத்தருணம் முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின், திருகோணமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆனந்தகுளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள சுபத்ரா லங்கா மாவத்தை பிரதேசமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.