நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினால் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் பதுரலிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இங்குருதலுவ கிராம சேவகர் பிரிவு மற்றும் மீஹகஹதென்ன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெலவத்த கிழக்கு, மிரிஸ்வத்த மற்றும் பஹல ஹேவெச்ச கிராம சேவகர் பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளது.