மன்னார் மாவட்டத்தில் ஒரேநேரத்தில் நூறு கொரோனா நோயாளர்களை அனுமதித்துச் சிகிச்சை வழங்கவதற்கான விசேட சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது.
இதற்காக, மன்னார் தாராபுரம் பகுதியில் அமைந்துள்ள துருக்கி சிட்டி பாடசாலையினை மாவட்ட அரசாங்க அதிபர் பொறுப்பேற்றுள்ளார்.
இதையடுத்து, குறித்த பாடசாலையை இராணுவத்தின் உதவியுடன் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த சிகிச்சை நிலையத்தில் மன்னார் சுகாதாரத் துறையினர் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இதுவேளை, மன்னார் மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையிலான குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் குறித்த சிகிச்சை நிலையத்தின் பணிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய மாவட்டங்களில் உள்ள சிகிச்சை நிலையங்களிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்கைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.