மத்திய அரசு தனது கடமைகளை முறையாக செய்திருந்தால் இந்தியாவிற்கு இந்த நிலைமை வந்திருக்குமா என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டு, மத்திய அரசு தொடர்ந்து தன் செயல்களுக்கு மார்த்தட்டிக் கொள்வது வேதனைக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், இது குறித்து ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர், ‘ எந்த மாதிரியான மருத்துவ உபகரணங்களை இந்தியா வெளிநாடுகளில் இருந்து பெற்றது. இந்த மருத்துவ உபகரணங்கள், நிதியுதவியால் யார், எந்த மாநிலம் பயன்பெற்றது.
எவ்வாறு, எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கு உதவிகள் ஒதுக்கப்பட்டன. ஏன் வெளிப்படைத் தன்மை இல்லை. மத்திய அரசிடம் இருந்து ஏதாவது பதில் இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.