தேவை ஏற்படின் மாகாணங்கள் அல்லது மாவட்டங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
கொரோனா தொற்று நிலைமை நாளாந்த அடிப்படையில் மாற்றமடைவதாக குறிப்பிட்ட அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அதிகரித்து வரும் சூழ்நிலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 20,000 க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஜனவரி முதல் தொடங்கிய தொற்றின் மோசமான அதிகரிப்பை காட்டுகின்றது.