ஒரு நாளைக்கு நடத்தப்பட வேண்டிய பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 24 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாக உயர்த்த சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தற்போது ஒரு நாளைக்கு 24,000க்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படுகின்றன என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் -19 நிலைமையைச் சமாளிக்க அதை சுமார் 30,000 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பி.சி.ஆர் சோதனை முடிந்ததும் முடிவுகள் வெளிவரும் வரை மக்களை தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.