கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளுக்கு மோசமான பின்விளைவுகள் ஏற்படுவதாகவும், இதனை கவனமாக கையாள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன்படி கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளுக்கு நெஞ்சுவலி, பார்வைக் குறைப்பாடு, மூச்சுவிடுவதில் சிரமம், இரத்தம் சொட்டும் இருமல் போன்ற பின்விளைவுள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பெரும்பாலும் நீரிழிவு நோய்தான் காரணம் எனவும் மருத்துவர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நோயாளிகளிடம் காணப்படும் கரிய தேமல் போன்ற அடையாளம் அச்சத்தை ஏற்படுத்தி வருதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இவ்வகை கரிய தேமலுடனான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போது நீரிழிவு நோய்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றம், பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துமாறு இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.