கொரோனா நிவாரண நிதியாக இந்தியாவிற்கு சுமார் 110 கோடி ரூபாயை நிவாரண நிதியாக வழங்க ருவிட்டர் நிறுவனம் முன்வந்துள்ளது.
இது குறித்த தகவல்களை ருவிட்டர் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான ஜேக் பேட்ரிக் டோர்சே தெரிவித்துள்ளார்.
குறித்த உதவி தொகை மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேர், எய்ட் இந்தியா மற்றும் சேவா இன்டர்நேஷல் யுஎஸ்ஏ ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கே மேற்படி நிதி வழங்கப்படவுள்ளது.
ஒக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றைn கொள்வனவு செய்ய குறித்த நிதி பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.