கொரோனா தொற்று தொடர்பாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தரவு மற்றும் தகவல்களில் இருந்த நம்பிக்கையை பொதுமக்கள் இழந்துவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
மேலும் கொரோனா கட்டுப்பாடு தொடர்பான பொறிமுறையில் சுகாதாரத் துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றாலும், மற்ற தரப்பினருக்கே அரசாங்கம் முன்னுரிமை கொடுப்பதாக குற்றம் சாட்டினார்.
எனவே கொரோனா தொற்றால் ஏற்படும் ஆபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அனுர குமார திசாநாயக்க கேட்டுக்கொண்டார்.
அந்தவகையில் கொரோனா கட்டுப்பட்டு செயலணி உடனடியாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், நாட்டில் பரவும் கொரோனா தொற்றுக்கு அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் தவறான முடிவுகளே காரணம் என்றும் குறிப்பிட்டார்.