இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தாவிட்டால் அடுத்தடுத்து கொரோனா அலை உருவாகும் வாய்ப்புகள் இருப்பதாக பிட்ச் ரேட்டிங் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பிட்ச் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி மெதுவாக நடந்து வருகிறது.
தடுப்பூசி பணிகள் மெதுவாக நடந்தால், இந்தியாவில் தற்போதைய 2 ஆவது அலை முடிந்தபின், அடுத்தடுத்து கொரோனா அலைகள் உருவாகும் சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன.
இரண்டாவது அலையில் நிலவும் குறியீடுகளின் படி நாட்டில் உள்ள நிதி நிறுவனங்களுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் ரிசர்வ் வங்கி நிதி நிறுவனங்களை சிக்கலில் இருந்து மீட்க மேலும் பல்வேறு பொருளாதாரச் சலுகைகளை வழங்கலாம்.
தற்போதுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டாலும், பொருளாதார நடவடிக்கையை பாதிக்காத வகையில் இருந்து வருகிறது.
ஆனால் அதிகமான மாநிலங்களில் நீண்ட கால ஊரடங்கினை நடைமுறைப்படுத்தினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.