கொரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி தொகையாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி தொகை வழங்கப்படும்.
கொரோனா நோய்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும், செவிலியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் இதர பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.