ஒலிம்பிக் போட்டி நடப்பது சந்தேகம்தான் என்று பிரபல டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா கூறியுள்ளார்.
கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் திருவிழா ஜூலை 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையிலேயே கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் இந்த போட்டி நடப்பது சந்தேகம்தான் என பிரபல டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா கூறியுள்ளார்.
4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான 23 வயதான நவோமி ஒசாகா, தற்போதைய நிலைமையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்பதை தன்னால் உறுதியாக கூற முடியாது என தெரிவித்துள்ளார்.
ஒரு விளையாட்டு வீராங்கனையாக ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே தனது விருப்பமாகும் என்றும் ஆனால் ஒரு மனிதராக, இப்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இருக்கிறோம் என்றுதான் கூறுவேன் என தெரிவித்துள்ளார்.
மக்கள் உடல் ஆரோக்கியத்துடன் இல்லாதபோது, போட்டி பாதுகாப்பானதாக இல்லை என்று உணரும் பட்சத்தில் நிச்சயம் ஒலிம்பிக் போட்டிக்கு சிக்கல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.