தெலுங்கானாவில் இன்று (புதன்கிழமை) காலை முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ள நிலையில், காலை 6 மணி முதல் 10 மணிவரை மாத்திரம் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 20 திகதி முதல் தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு அமுலில் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.