அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட தவறியமை காரணமாகவே கொரோனா தொற்று அதிகரிக்க வழிவகுத்தது என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கம் பொறுப்புடன் நடந்துகொள்ளாத நிலையில் தற்போது மக்களைக் குற்றம் சாட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.