டொக்டர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அப்டேட்டுகளை இரசிகர்கள் கேட்டுள்ள நிலையில், இது குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், டொக்டர் திரைப்படத்தின் அப்டேட் கேட்டு பலரும் எங்களை தொடர்பு கொள்கிறீர்கள்.
முழு படமும் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. கொரோனா காரணமாக அதை வெளியிட முடியாமல், பல பொருhளதார பிரச்சினைகளையும் எதிர்கொண்டுள்ளோம்.
திரைப்படத்தை வெளியிடுவதற்கு சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறோம்.
மறுபக்கம் கொரோனா இரண்டாவது அலையில், சுற்றங்களையும், நண்பர்களையும் இழந்து கொண்டிருக்கிறேன். இது போன்ற ஒரு சூழ்நிலையில், டொக்டர் படத்தின் வெளியீடு குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.