மறைந்த எடின்பர்க் இளவரசர் பிலிப்பின் நினைவாக நான்கு புதிய முத்திரைகளின் தொகுப்பு ரோயல் மெயிலால் வெளியிடப்பட்டன.
கருப்பு மற்றும் வெள்ளை வடிவமைப்புகள் கொண்ட முத்திரைகளாகவும் கடந்த மாதம் 99 வயதில் இறந்த இளவரசர் பிலிப்பை அவரது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களையும் இந்த முத்திரைகள் காட்டுகின்றன.
முதல் வடிவமைப்பில் ஒரு இளைஞனாக இளவரசரின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது. இது புகைப்படக்காரரான பரோன் எடுத்தது.
இரண்டாவது, டெவோனில் உள்ள டார்ட்மவுத் கடற்படைக் கல்லூரியில் தனது மகன் இளவரசர் ஆண்ட்ரூவின் பாஸிங் அவுட் அணிவகுப்பில் இளவரசர் பிலிப்பை சித்தரிக்கிறார்.
மற்றொரு முத்திரை, ரோயல் வின்ட்சர் குதிரை கண்காட்சியில் இளவரசரைக் காட்டுகிறது.
இறுதி முத்திரை, மிக சமீபத்திய படம். இது புகைப்படக் கலைஞர் டெர்ரி ஓ நீல் எடுத்த உருவப்படம்.
ஜூன் 24ஆம் திகதி முதல் விற்பனைக்கு வரும் இந்த முத்திரைகள் 6.65 பவுண்டுகள் விலையில் ஒரு மினியேச்சர் தாளில் வழங்கப்படும்.
இங்கிலாந்து அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்தவர் என்ற பெருமைக்குரிய இளவரசர் பிலிப், கடந்த மாதம் 9ஆம் திகதி காலமானார். அவரது உடல் விண்ட்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.