அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் பெரும்பாலான உள் மற்றும் வெளி இடங்களுக்கு முகக்கவசம் இல்லாமல் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் 35 சதவீத மக்கள் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இந்த புதிய அறிவிப்புபடி இரண்டு அளவுகளையும் செலுத்தி கொண்ட மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க தேவையில்லை.
இந்த புதிய தளர்வுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு சென்ற ஜனாதிபதி பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் பிற ஊழியர்கள் முகக்கவசம் இல்லாமல் சென்றனர்.
‘இது அமெரிக்காவுக்கு சிறப்பான ஒரு தினம். நாங்கள் வெளியே சென்று யாரையும் கைது செய்யப்போவதில்லை’ என்று தெரிவித்த பைடன் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தினார்.
இருப்பினும் கூட்டமாக இருக்கும் பேருந்துகள், விமானங்கள் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.