அஸாம் வனப்பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளான நிலையில், 18 யானைகள் உயிரிழந்துள்ளன.
பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்த வனத்துறையினர், இது குறித்த மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருதாக தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வனத்துறை அமைச்சர் பரிமன் சுக்லபாயித்யா, ஏராளமான யானைகள் உயிரிழந்துள்ளமை கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சருக்கு அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவில் சுமார் 27 ஆயிரம் யானைகள் உயிர்வாழ்கின்ற நிலையில், அவற்றில் 21 வீதமான யானைகள் அஸாம் மாநிலத்தில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.