நாட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் 2,289 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ரீதியான தகவலை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி கொழும்பில் 555 பேரும் காலியில் 281 பேரும் கம்பஹாவில் 236 குருநாகலில் 218 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை களுத்துறையில் 211 பேருக்கும் புத்தளத்தில் 99 பேருக்கும் மாத்தளை மற்றும் மாத்தறையில் தலா 79 பேருக்கும் கேகாலையில் 73 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும் நுவரெலியாவில் 71 பேருக்கும் யாழ்ப்பாணம் மற்றும் அம்பாறையில் தலா 45 பேருக்கும் ஹம்பாந்தோட்டையில் 40 பேருக்கும் கண்டியில் 38 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
அனுராதபுரம் மற்றும் இரத்தினபுரியில் தலா 35 பேருக்கும் பொலன்னறுவையில் 29 பேருக்கும் திருகோணமலையில் 24 பேருக்கும் மொனராகலையில் 22 பேருக்கும் பதுளையில் 20 பேருக்கும் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 12 பேர் கிளிநொச்சியிலும் 11 பேர் மட்டக்களப்பிலும் 10 பேர் வவுனியாவில் ஒருவர் முல்லைத்தீவில் 20 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களும் அடங்குவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.