கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ கொலம்பியாவில் வைரஸ் தொற்றினால், மொத்தமாக 80ஆயிரத்து 250பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ள 12ஆவது நாடாக விளங்கும் கொலம்பியாவில் இதுவரை மொத்தமாக 30இலட்சத்து 84ஆயிரத்து 460பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 16ஆயிரத்து 581பேர் பாதிக்கப்பட்டதோடு 490பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 15ஆயிரத்து 220பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆறாயிரத்து 582பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 28இலட்சத்து 88ஆயிரத்து 990பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.