பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 193பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 44இலட்சத்து 46ஆயிரத்து 824பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 27ஆயிரத்து 668பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 45ஆயிரத்து 715பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 129பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 42இலட்சத்து 73ஆயிரத்து 441பேர் பூரண குணமடைந்துள்ளனர்.