கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 991பேர் பாதிக்கப்பட்டதோடு 44பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 18ஆயிரத்து 405பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 24ஆயிரத்து 869பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 73ஆயிரத்து 426பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 327பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 12இலட்சத்து 20ஆயிரத்து 110பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.