இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரையில் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு இந்த தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 941ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் நாட்டில் இரண்டாயிரத்து 386 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 471ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 220 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 22 ஆயிரத்து 310 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேநேரம், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 20 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
பன்வில,களனி, புளத்சிங்கள, கோனபொல,கம்பஹா, களவான பொலனறுவை, அம்பதென, குண்டசாலை, களுத்துறை, நாவுத்துடுவ, மக்கொன, கொழும்பு – 13, ருவன்வெல்ல, வவுனியா, கொழும்பு -14, நேபொட, தியத்தலாவ மற்றும் பசறை ஆகிய பிரதேசங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 941ஆக அதிகரித்துள்ளது.