மக்கள் நீண்ட நேரம் பணியாற்றுவதன் காரணமாக ஆண்டுக்கு 7 இலட்சத்து 45 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் நிலைமை இதில் மேலும் தாக்கம் செலுத்தாலாம் எனவும், குறித்த அமைப்பு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்த உலக சுகாதாரா ஸ்தாபனம் நடத்திய ஆய்வில், சாதாரண வேலை நேரத்துடன் ஒப்பிடும்போது வாரத்தில் 55 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் வேலை செய்பவர்கள் அதிக அளவில் பாதிப்பினை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறு பணிப்புரிபவர்களில் 35 வீதமானோர், பக்கவாதத்தினால் பாதிக்கப்படுவதுடன், 17 வீதமானோர் இதயநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை தழுவதாக குறித்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசுபிக் பிராந்தியங்களில் வாழும் மக்கள் இதன்காரணமாக அதிகள அளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















