வெளிநாடுகளில் இருந்து பிரான்சுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய விவகாரங்களுக்கான ஆளுனர் க்ளெமென்ட் பியூன் இதுகுறித்து கூறுகையில், ‘இக்கோடை காலத்தின் போது வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையான பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ள கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது.
ஐரோப்பிய நாடுகளில் பி.சி.ஆர். பரிசோதனைகளை இலவசமாக்கிய முதல் நாடு பிரான்சாகும்’ என கூறினார்.
சுற்றுலா வரும் பயணிகளுக்கு ஸ்பியினில் கட்டணமாக 120 யூரோக்களும் பிரித்தானியாவில் 100 பவுண்டுகளுக்கு அதிகமாகவும், ஸ்வீடனில் 300 யூரோக்கள் வரை கட்டணமாகவும் அறவிடப்படுகின்றன.
ஆனால், இந்த கட்டணம் இலவசமாக்கப்பட்டுள்ளமை வெளிநாடுகளில் இருந்து வருகை தருவோருக்கு மாத்திரமே. இங்கிருந்து பயணிப்போருக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.