பிரித்தானிய பிளாஸ்டிக் கழிவுகள் துருக்கிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பின்னர் சட்டவிரோதமாக கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன என்று புதிய அறிக்கை கூறுகிறது.
கடந்த ஆண்டு பிரித்தானியாவின் பிளாஸ்டிக் கழிவு ஏற்றுமதியில் 40 சதவீதம் – அல்லது 210,000 டன் துருக்கிக்கு அனுப்பப்பட்டதாக கிரீன்பீஸ் தெரிவித்துள்ளது.
ஆனால், மறுசுழற்சி செய்வதற்குப் பதிலாக, அதில் சில வீதிகள், வயல்வெளிகள் மற்றும் நீர்வழிகளில் வீசப்படுவதை புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கிரீன்பீஸின் அறிக்கை, துருக்கி ஐரோப்பாவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் கழிவுப்பொருள் இடமாக மாறி வருவதாக எச்சரித்தது.
தெற்கு துருக்கி முழுவதும் 10 தளங்களை ஆராய்ந்ததாகவும், பிரித்தானியாவின் பல்பொருள் அங்காடி மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகள் மற்றும் பேக்கேஜிங் இருப்பதாகவும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.