நடிகை ஓவியா என்னையும் கைது செய்யுங்கள் என்ற ஹேஷ்டேக்குடன் ருவிட்டரில் இட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
டெல்லியில் எங்கள் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள் என பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இது குறித்து டெல்லி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, என்னையும் கைது செய்யுங்கள் என ருவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக நடிகை ஓவியாவும், இது ஜனநாயகமா எனக் கேள்வி எழுப்பியுள்ளதுடன், என்னையும் கைது செய்யுங்கள் என பதிவிட்டு ருவிட் செய்துள்ளார். குறித்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.