ரயில் ஓட்டுநர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தொழிற்சங்கங்களுக்கு உறுதியளிக்கப்பட்டதை அடுத்து ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.
இதனையடுத்து, இன்று (திங்கட்கிழமை) மதியம் 1.30 மணி முதல் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே என்ஜின் ஓட்டுநர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டு சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து, எந்தவித இடையூறும் இல்லாமல் தங்கள் சேவையை மீண்டும் தொடங்க அவர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.
ரயில்வே தொழிற்சங்கங்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு – மேலதிக பேருந்து சேவைகள் முன்னெடுப்பு!