கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் உள்ள 9 மாநில பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
காணொலி வாயிலாக நடைபெற்றுவரும் குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டுள்ளார்.
இதன்போது கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்த ஆராயப்பட்டு வருதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த மருத்துவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.